கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உடனடியாக அடையாளம் காணக்கூடிய வகையில் ஒரு புத்தம் புதிய ஆப் ஐகானை ‘ட்ரூகாலர்’ அறிமுகப்படுத்தியது.
ட்ரூகாலரின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆலன் மாமேடி கூறியதாவது: அனைவருக்குமான தகவல்தொடர்புகள் பாதுகாக் கப்படவேண்டும் என்ற எங்கள் நோக்கமானது, சூழமைவு தேடல் (சர்ச் கான்டெக்ஸ்ட்) போன்ற மோசடிக்கெதிரான தீர்வுகளை உருவாக்கவும் மற்றும் பயனர் தனியுரிமை மேம்பாட்டுக்கான தொழில் நுட் பத்தை நிறுவவும் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுகிறது என்றார்.
இந்த ஐடண்டிட்டி புத்தாக்கத்தின் ஒரு பகுதி யாக, ட்ரூகாலரின் பயனர்கள் ட்ரூகாலர் AI ஐடண் டிட்டி எஞ்சினின் ஒரு பகுதியாக அமைந்துள்ள சர்ச் கான்டெக்ஸ்ட் என்ற சக்திவாய்ந்த புதியதொரு மோசடி எதிர்ப்பு சிறப்பம்சதையும் பெறுகின்றனர்.
எந்த ஒரு எண்ணுக்கான தேடல் முடிவுகளையும் காணும் போது, அந்த குறிப்பிட்ட எண்ணுக்கான பெயர் சமீபத்தில் மாற்றப்பட்டிருந்தாலோ அல்லது அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாக்கியிருந்தாலோ அது குறித்த தகவல் ட்ரூகாலர் பயனர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும்.
இந்தச் சூழமைவு சார்ந்த செய்தியை ட்ரூகாலர் ஆப் , மூன்று வண்ண வகைகளாகப் பிரிக்கிறது. பொதுவாக மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு நீலம் , குறிப்பிட்ட எண்ணில் கடந்த 7 நாட்களில் 3 முறைக்கு மேல் பெயர் மாற்றப்பட்டிருந்தால் மஞ்சள், இறுதியாக தீவிரமான மோசடி மற்றும் வீண் செய்திகள் தொடர்பான நடவடிக்கைகளை அடையாளப்படுத்தும் விதமாக பலமுறை அடிக்கடி பெயர் மாற்றம் நிகழ்ந் திருந்தால் சிவப்பு போன்ற வண்ணங்களில் அது அடையாளப்படுத்தப்படும் மற்றும் அடிக்கடி பெயர் மாற்றங்களைக்குறிக்கும். இந்தச் செய்தி ஆண்ட்ராய்ட், ஐபோன், ட்ரூகாலர் இணையம் முழுவதிலும் உள்ள அனைத்து தேடல் முடிவுகளிலும் காட்சிப்படுத்தப்படும்.