தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி ஒரு நாள் முழு கதவடைப்பு போராட்டம் நடத் துகிறது
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கொடிசியா தலைவர் திருஞானம், காட்மா தலைவர் சிவகுமார், சீமா தலைவர் விக்னேஷ் மற்றும் நிர்வா கிகள் கூறியதாவது:- தமிழ்நாடு தொழில் துறை முன்னோடி மாநில மாக தேர்ந்து வருகிறது. இதில் குறு சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு வைக்கிறது.
பொருளாதார மந்த நிலை மூலப் பொருட்கள் விலை உயர்வு திறன்மிகு பணியாளர்கள் பற்றாக் குறை போன்ற இன்னல்களை தொழில்துறையினர் சந் தித்து வருகிறார்கள்
கடந்த ஆண்டு அதிகப் படியான உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தால் சிறு மற்றும் நடுத்தர தொழில் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றன இதனால் அனைத்து தொழில்களும் நிரந்தர மாக முடங்கிவிடும் அபாயம் உள்ளது.
எனவே எங்களது ஏழு அம்சா கோரிக்கையை வலியுறுத்திவருகிற 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடைபெறும்.இதனால் அர சுக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து இருநூறு கோடிரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மூணு கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு குடிசை மற்றும் சிறு மின் நுகர்வோருக்கு12 கே டபிள்யு லோடு மின் இணைப்பு அளிக்கப்பட வேண்டும்உயர் மின்னழுத்த கேப்புக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் பி கவர் கட்டணத்தை முற்றிலும் நீக்க வேண்டும்
ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வு ஒரு சதவீதமாக இருக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கை அரசு நிறைவேற்றி தர வேண்டும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.