fbpx
Homeபிற செய்திகள்தருமபுரியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு

தருமபுரியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு

நல்லம் பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியத அள்ளி ஊராட்சி, மேல் பூரிக்கல் மற்றும் கீழ் ஈசல்பட்டி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிதியில் தலா ரூபாய் 11.97 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

அங்கன்வாடி மைய கட்டிடங்களை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், நல்லம் பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்திபிரியா, தொகுதி மேற்பார்வையாளர் அன்புகரசி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதிலட்சுமிசண்முகம், இராஜீவ்காந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய தலைவர் பச்சியப்பன், ஒன்றிய பொருளாளர் உத்திரகுமாரி, வார்டு உறுப்பினர்கள் சத்யாசந்திரசேகர், முருகன், கிரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img