திருப்பூர் திமுக மத்திய மாவட்ட கழக செயலாளரும் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மண்டலம் எண் 3, வார்டு எண் 50ல் உள்ள கரட்டங்காடு விரிவு வீதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்ட பணி துவக்க விழா நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடன் தெற்கு மாநகரச் செயலாளர் டி கே டி நாகராஜ், பகுதி செயலாளர் உசேன், தம்பி குமாரசாமி, மாமன்ற உறுப் பினர் பெனாசிர் நசுருதீன், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



