fbpx
Homeபிற செய்திகள்ஸ்பெக்டா பிரீமியம் குவார்ட்ஸ் சர்ஃபேஸ்களை கோவையில் காட்சிப்படுத்தியது

ஸ்பெக்டா பிரீமியம் குவார்ட்ஸ் சர்ஃபேஸ்களை கோவையில் காட்சிப்படுத்தியது

ஏ.ஆர்.எல் குழுமத்தின், இந்தியாவின் முன்னணி சொகுசு குவார்ட்ஸ் பிராண்டான ‘ஸ்பெக்டா குவார்ட்ஸ் சர்ஃபேசஸ்’, தென்னிந்தியாவில் அதன் தடத்தை வலுப்படுத்தி வருவதுடன் அதன் வணிகத்தின் முக்கிய வளர்ச்சி உந்துசக்தியாகவும் உருவெடுத்துள்ளது.

பிரீமியம் குடியிருப்புகள், நவீன சமை யலறைகள், குளியலறைகள் மற்றும் வணிக இடங்கள் ஆகியவற்றில் நகரத்தின் அதிகரித்து வரும் முதலீடுகள் ஸ்பெக்டாவின் எதிர்கால பார்வைக்கு கோயம்புத்தூரை மையமாக ஆக்குகிறது.

இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெக்டா கோயம்புத்தூரில் நடந்த ACE Reflect 2025 நிகழ்வில் அதன் பிரீமியம் அளவிலான குவார்ட்ஸ் சர்ஃ பேஸ்களை காட்சிப்படுத்தியது. இந்த நிகழ்வில், நிறுவனம் Pastel Poise வெளியிட்டது.

இந்த கண்காட்சி, ஸ்பெக்டாவின் புதுமையை உலகளாவிய வடிவமைப்பு போக்குகளுடன் இணைத்து வலியுறுத்தியது.

இந்த நிகழ்வில் மேயர் ரங்கநாயகி ராமச் சந்திரன் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு, உயர்தர வாழ்க்கை முறை தீர்வுகளுக்கான மையமாக நகரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து ஸ்பெக்டா குவார்ட்ஸ் சர்ஃபேசஸின் நிறுவனர் அங்கித் ஜெயின் கூறுகையில், “எங்கள் Pastel Poise சேகரிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாங்கள் ஒரு புதிய வடிவமைப்பு அழகியலை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், குவார்ட்ஸ் மேற்பரப்பு துறையில் புதிய அளவுகோல்களை அமைப்பதற்கான எங்கள் உறுதிமொழியையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

அடுத்த ஒரு ஆண்டில், ஸ்பெக்டாவின் இருப்பை உறுதிப்படுத்த தமிழ்நாட்டில் பிராண்ட் காட்சி வலுப்படுத்தல், விநியோக விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுடன் ஆழமான தொடர்புகளை உருவாக்குவதற்காக சுமார் 1 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது”, என்றார்.

படிக்க வேண்டும்

spot_img