யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை பிராந்திய அலுவலகம் சார்பில் தனது சமூக பங்களிப்பு நிதி மூலம் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விலைப்பட்டியல் போர்டை அமைத்துக் கொடுத்துள்ளது.
இதனை திறந்து வைத்த வங்கியின் துணைப் பொது மேலாளர் ரெஞ்சித் சுவாமிநாதன், அங்குள்ள 150 கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் பொருட்களை எளிதில் வாங்க வசதியாக கியூஆர் கோடு வெப் டேபிள்களையும் வழங்கினார்.



