இந்திய பாரம்பரியமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் திருநெல்வேலி ஷோரூமில் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் நகைகள் உள்ளன. இந்த கண்காட்சியை ராம் சினிமாஸ் இயக்குநர் ராமசாமி தொடங்கி வைத்தார்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திருநெல்வேலி கிளை தலைவர் பாசில் கடவன், கிளை துணை தலைவர் சிபின் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சி
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’ ,பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட ‘எத்தினிக்’,கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அழகிய நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம். மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், ராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், ஆகிய நகரங்களில் 19 கிளைகளை கொண்டுள்ளது.



