fbpx
Homeபிற செய்திகள்விரிவான கல்வி திட்டத்திற்காக என்இசி -ஏவிஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

விரிவான கல்வி திட்டத்திற்காக என்இசி -ஏவிஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

என்இசி கார்ப்பரேஷனுக்கு சொந்தமான துணை நிறுவனமான என்இசி கார்ப்பரேஷன் இந்தியா (என்இசி இந்தியா), தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான விரிவான கல்வி திட்டத்திற்காக ஏவிஐடி (ஆறுபடை வீடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த வளாகத்தில் பிரத்யேக ஏஐ/எம்எல் மற்றும் எச்பிசி ஆய்வகத்தை நிறுவுவதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு பணிச்சுமைகளில் தங்கள் முழு திறனை அடைய ஒப்பந்தம் உதவும்.

ஒப்பந்தத்தில் என்இசி கார்ப்பரேஷன் இந்தியாவின் பொதுமேலாளர் தீபக் ஜா, ஏவிஐடியின் முதல்வர் ஜி. செல்வகுமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
என்இசி இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தளத்தின் பொது மேலாளர் மற்றும் தலைவர் தீபக் ஜா கூறியாதவது:

தொழில்நுட்பக் கருத்துகள்

கூட்டுக் கல்வித் திட்டம் தொழில்துறைக்குத் தயாரான நிபுணர்களை உருவாக்கும். மாணவர்கள் ஆழ்ந்த தொழில்நுட்பக் கருத்துகள், அதிநவீன மென்பொருள் மற்றும் வன்பொருள் தீர்வுகள் மற்றும் டொமைன் நிபுணத்துவம் ஆகியவற்றை கற்றுக்கொள்வார்கள்.

மத்திய பட்ஜெட் 2023, இந்தியாவில் ஏஐயை உருவாக்குதல், தொழில்துறை-கல்வி கூட்டாண்மை மற்றும் இளைஞர்களின் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. எதிர்கால தொழில்நுட்ப ஆர்வலர் களுடன் அறிவு மற்றும் திறன் பகிர்வுக்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.

ஒப்பந்தத்தின் மூலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இளை ஞர்களை தன்னிறைவு அடையச் செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார். ஏவிஐடியின் முதல்வர் ஜி.செல்வக்குமார் கூறியாதவது:

கலப்பு கல்விக் கட்டமைப்பை கையாள்வதே எதிர் காலமாகும். என்இசி இந்தியாவுடன் சேர்ந்து, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், நிஜ உலகப் பிரச்சனைகளை தீர்க்கும் புத்திசாலித்தனத்தை மாணவர்களுக்கு வெளிப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் ஒரு ஆற்றல்மிக்க பணியிடத்தை வழிநடத்தும் வசதியை பெற்றிருப்பார்கள் என்றார்.

இந்த கல்வித் திட்டம் ஆண்டுதோறும் 240 மாணவர்களின் திறனை மேம்படுத்துவதையும், தொழில்துறையை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

என்இசி வெக்டர் என்ஜின் (விஇ) அமைப்பு -உந்துதல் ஆய்வகத்தை நிறுவுவதன் மூலம், என்இசி இந்தியா, ஏவிஐடி-யை பாடநெறிக்கு தேவையான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வேலை சார்ந்த, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கான திட்டப்பணிகளுடன் தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img