fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மார்ச் 4-ம் தேதி தொழில்முறை குத்துச்சண்டை

கோவையில் மார்ச் 4-ம் தேதி தொழில்முறை குத்துச்சண்டை

கோவையில் முதல் முறையாக எப்7ஹப், தொழில்முறை குத்துச் சண்டை இரவு -2023 போட்டி வரும் 4ம் தேதி நடக்கிறது. இதில், முகமது இர்பான் தனது திறனை வெளிப்படுத்துகிறார்.

கோவை மாவட்ட குத்துச்சண்டை சங்கம்

இது குறித்து கோவை மாவட்ட குத்துச்சண்டை சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், குத்துச்சண்டை மேலாண்மை தலைவராக செயல்பட்டு வரும் எப்7ஹப் உரிமையாளர் ராயன் கூறியதாவது :- தென்னிந்திய அளவிலும், கோவையிலும் குத்துச்சண்டைக்கு அவ்வளவாக நாம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பயிற்சிக்கும், வழிகாட்டுதலுக்கும் சரியான தளம் இல்லை.

குத்துச்சண்டை வீரர்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எங்களது நோக்கம், குத்துச்சண்டை வீரர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு சர்வதேச அளவில் சண்டையிட வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். ஒரு குத்துச்சண்டை வீரராக வளர உதவி செய்து, தமிழ்நாட்டில் விளையாட்டுக்களை உருவாக்க வேண்டும் என்பதே.

கோவையில் முதல் முறையாக தொழில் முறையிலான குத்துச் சண்டை நிகழ்ச் சியை இந்திய பாக்ஸிங் கவுன்சில் அனுமதியோடு நடத்துகிறோம்.
எப்7 ஹப் மற்றும் அடிவேரிலிருந்து குத்துச்சண்டையை மேம்படுத்துவோர் (முஸ்தபா கமல் – நிறுவனர்) ஆகியோர் இணைந்து கோவையில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த நிகழ்வில் 4, 6 மற்றும் 8 சுற்றுக்கள் குத்துச்சண்டைகள் நடக்கும்.

முக்கிய நிகழ்ச்சி 8 சுற்றுக்களைக் கொண்டது. சென்னையிலிருந்து இரண்டு டபிள்யுபிசி இன்டியா வெற்றி யாளர், டபிள்யுபிசி ஆஸ்திரேலியா வெற்றியாளர் – (வெல்டர் வெயிட்) ஆகியோர் முதன்மை விளையாட்டில் சண்டையிடுகின்றனர்.

பஞ்சாப், ஹைதராபாத், டில்லி, ஆந்திரபிரதேசம், ஜார்கன்ட், மும்பை, பெங்களுரு, சென்னை, கோவா, மணிப்பூர், ஹரியானா, மற்றும் கோவையிலிருந்தும் வீரர்கள் பங் கேற்கின்றனர். தற்போது கோவையில் 7 வீரர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்க தயாராகியுள்ளனர்.

நாங்கள் தரமான கருவிகளைக் கொண்டு இலவசமாக பயிற்சி தரவும் கவனம் செலுத்தி வருகிறோம். பயிற்சியில் நல்ல முறையில் சண்டையிடுவோர், சிறப்பாக விளையாடுவோருக்கு தொழில் முறையிலான குத்துச்சண்டை பயிற்சி அளிப்போம். தொழில்முறையிலான குத்துச்சண்டைக்கு மேலும் பலபடிகளில் பயிற்சி தரப்பட வேண்டும்.

சாதாரண குத்துச்சண் டையை காட்டிலும், தொழில் முறை குத்துச்சண்டை அதிக சுற்றுக்களைக் கொண்டது. அதற்கென தனித்திறன், அதிக சகிப்புத்தன்மை மற்றும் ஒவ்வொரு வீரருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் தேவைப்படும்.

கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு ராயன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img