Homeபிற செய்திகள்கோவை புரோஜோன் மால் நடத்திய இயற்கை விழிப்புணர்வு மாரத்தான்

கோவை புரோஜோன் மால் நடத்திய இயற்கை விழிப்புணர்வு மாரத்தான்

கோவை புரோஜோன் மாலில் இயற்கை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த “PROZONE GO GREEN” MARATHON நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், திரைப்பட நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த மாரத்தனில் நான்கு பிரிவுகளாக குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 6000 பேர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய அம்சமாக மாற்றுத்திறனாளிகள் பங்குபெற்ற 1 கிமீ ஓட்டம், மற்றும் தொடர் ஓட்டம் 1 கிமீ , 5 கிமீ, 10 கிமீ என 3 பிரிவுகளாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை புரோஜோன் மால் நிர்வாகத்தினர், கோயமுத்தூர் மாவட்ட அதலெடிக் அசோசியேஷன் மற்றும் UPTOWN CONFETTI செய்திருந்தனர் என்று, புரோஜோன் மாலின் இயக்குனர் விஜய் பதியா, பாபு (நிர்வாகம் & நிதி), மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் நாதன் மற்றும் முஷாமில் (OPERATIOS HEAD) ஆகியோர் தெரிவித்தனர். ரூ2 லடசம் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img