தேசிய அளவிலான சிலம்பம் போட்டி வேலூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஈரோடு திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளியின் மாணவர்கள் 9 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அவர்களை பள்ளியின் தலைவர் சி.ஜெயக்குமார், தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர்கள் சி.பாலசுப்ரமணியம், எம்.யுவராஜா, முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், முதல்வர். வி. பிரியதர்ஷினி, துணை முதல்வர் ஆர். மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கார்த்திகேயன ஆகியோர் பாராட்டினர்.