Homeபிற செய்திகள்தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு

தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு
விழிப்புணர்வு நிகழ்ச்சி கமிஷனர் அமுதா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன், பொது சுகாதாரப்பிரிவு பணியாளர்கள், நகராட்சி அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு டெங்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து தற்போது மழைக்காலம் என்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நகராட்சிக்குட்பட்ட பகுதியான தாசம்பாளையம் சாலை, எம்.எஸ்.ஆர்.புரம், பூவாத்தாள் லே-அவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கூட்டுத்தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, வீட்டின் சுற்றுப்புறத்தில் பழைய டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருள்களை போடக்கூடாது.
வீணான பொருட்கள் கிடந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள்,

சிமெண்ட் தொட்டிகள், ட்ரம்கள் உள்ளிட்டவற்றை கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். அவற்றை வாரம் ஒரு முறை தேய்த்துக்கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
இதனால் ஏடிஸ் கொசுப்புழு வளராமல் தடுக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும்,நகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img