fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மாவட்டஆட்சியர் ஆய்வு

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மாவட்டஆட்சியர் ஆய்வு

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வுமேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறுதுறைகளின் சார்பில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி மேட்டுநாசுவம்பாளையம், காலிங்கராயன்பாளையம் பழையூரில் ஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்புதிட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும், 15-வது நிதிக் குழுமானியத்தின் கீழ் ரூ.36.46 இலட்சம் மதிப்பீட்டிலும், நமக்குநாமேதிட்டத்தின் கீழ் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், அருந்தலையூர் எல்லப்பாளையம் பகுதியில் நபார்டுதிட்டத்தின் கீழ் ரூ.2.39 கோடிமதிப்பீட்டில் எல்லப்பாளையம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு உயர்மட்ட பாலத்தினையும், அதேப்பகுதியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் சமுதாயநல கூடத்தினையும், ரூ.30.50 இலட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர் எல்லப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்புதிட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், அய்யம்பாளையம் ராமகவுண்டன்வலசுசாலையில் ரூ.2.28 கோடிமதிப்பீட்டில் எல்லப்பாளையம் ஓடையின் குறுக்கேஉயர்மட்டபாலம் கட்டும் பணியினையும், மேட்டுநாசுவம் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தூய்மைபாரத இயக்கத்தின் கீழ் கழிப்பறைகட்டும் பணியினையும் எனமொத்தம் ரூ.6.73 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்திடஅலுவலர்களுக்குஅறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரியத்தால் அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் சித்தோடு நல்லக்கவுண்டன் பாளையம் திட்டப்பகுதியில் மொத்தமுள்ள 3264 குடியிருப்புகள் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுதற்போதுகழிவுநீர்; சுத்திகரிப்புநிலையம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் குடியிருப்புகளுக்கு குடிநீர்; வழங்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டுவாரியத்தால் நீர் உறிஞ்சிகிணறு, தரைமட்டநீர்தேக்கத் தொட்டிஆகியபணிகள் முடிக்கப்பட்டு மேல்நிலைநீர்தேக்கத் தொட்டிகட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனைத் மாவட்டஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்துமுடித்துமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடுவிற்பனை குழு சார்பில், ரூ.3.16 கோடிமதிப்பீட்டில் சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டுமானப்பணி, உலர்களம், கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், அடிப்படைசுகாதாரவசதிகளுடன் கூடியகட்டுமானப்பணிகள்,வேளாண் உட்கட்டமைப்புநிதியின் கீழ் ரூ.2.00 கோடிமதிப்பீட்டில் 250 மெ.டன் கொள்ளவு கொண்டகுளிர்பதனகிடங்கு,ரூ.2.00 கோடிமதிப்பீட்டில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட தேசிய மின்னணு பரிவர்த்தனை கிடங்கு, ரூ.10 கோடிமதிப்பீட்டில் மஞ்சளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடியமஞ்சள் ஏற்றுமதிமையம் ஆகிய கட்டுமானப்பணிகளை ஆய்வுமேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img