சமீபத்தில் கோபியில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக ஈரோடு யோகா சங்கம் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டியில் ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
இதில், ஈரோடு நந்தா பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்கள் உட்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளை கடந்து 30 மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியின் முடிவில் 10 நந்தா மாணவர்கள் முதலிடத்தையும், 8 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 7 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் வி.சண்முகன், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, முதல்வர்கள் பிரகாஷ் நாயர் ராஜேஷ், யோகா ஆசிரியர் ஆறுமுகவேல் ஆகியோர் பாராட்டினர்.



