fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் மஹாவீரர் ஜெயந்தி பல்லக்கு ஊர்வலம்

ராணிப்பேட்டையில் மஹாவீரர் ஜெயந்தி பல்லக்கு ஊர்வலம்

ராணிப்பேட்டை பஜார் தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் ஆலயத்திலிருந்து மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள். மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திருவுருவபடத்துடன் அலங்கார பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

மேளதாளங்ககுடன் நடனமாடிய படி ஜெயின் சமுதாய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பாடல்களை பாடிய படி ஊர்வலமாக ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஊர்வலம் ஆலயத்தை அடைந்தது.

இந்த ஊர்வலத்தில் உயிர்களை கொல்ல கூடாது, மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img