ஈரோடு மாவட்டத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்டம் தழுவிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 410க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங் கேற்றனர்.
இதில் நந்தா கல்லூரி, முதலமைச்சர் கோப்பைக்கான கால் பந்து, மேஜைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் வெள்ளி பதக்கத்தினையும கபடிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் வென்றது.
இதன் மூலம் மாநில அளவி லான போட்டிகளில் விளை யாடுவதற்கு தகுதி பெற்றது. அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் பிரிவுக்கான கைப்பந்துப் போட்டியில் வெள்ளி பதக்கத்தினை யும், கபடிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் வென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, பாராட்டினர்.