மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க சிஎஸ்சியில் இருந்து மொபைல் வேன் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கிராமத்தில் உள்ள விஜயலட்சுமிக்கு வழங்கியுள்ளனர்.
இந்த வேனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று கோவை சின்ன வேடம்பட்டியில் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் சிஎஸ்சியின் மாவட்ட மேலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள CSC VLE பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த வேன் மூலம் அனைத்து மக்களும் எளிமையாக மத்திய அரசின் திட்டங்களை பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த வாய்ப்பை அளித்த சிஎஸ்சியின் மத்திய மாநில தலைமை அதிகாரிகள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.