fbpx
Homeபிற செய்திகள்நீட் தேர்வில் நாமக்கல் மாணவர்கள் சாதனை

நீட் தேர்வில் நாமக்கல் மாணவர்கள் சாதனை

நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவ மாணவிகள் 4 பேர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததை அடுத்து அந்த மாணவ- மாணவிகளை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவ மாணவிகள் ரஜனிஸ், ரோஹித், சபரீசன், ஜெயதி பூர்வஜா ஆகிய நான்கு பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் ஒரு சாதனை படைத்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, இந்தியா முழுவதும் தேசிய தேர்வு முகமை (ழிஜிகி) சார்பில் கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வை 11 மையங்களில் 6,180 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று ழிஜிகி ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 10 நாட்கள் முன்பாகவே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளின் படி நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, ரஜனிஸ், ரோஹித், சபரீசன், ஜெயதி பூர்வஜா, ஆகிய 4 பேரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த மாணவ மாணவிகள் நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்திற்கு வருகை தந்து அவர்களுக்கு பயிற்சி மையத்தின் சார்பில் கல்வி நிலைய தாளாளர் சரவணன், ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் இனிப்புகள் வழங்கி அவர்களை பாராட்டினர்.

இப்பயிற்சி மைய மாணவர்கள் நித்தீஷ், ரித்திக்சரன், விக்னேஷ் ஆகிய 3 பேர் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று பயிற்சி மையத்தில் 2-ம் இடம் பெற்றுள்ளனர். ஹித்தேஷ் மோகன், மிதுன்ராஜ், பவன்குமார், சங்கமிதுன் ஆகிய 4 மாணவர்கள் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று பயிற்சி மையத்தில் 3ஆம் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதிய 49 மாணவர்கள் 720க்கு 700 மதிப்பெண்களுக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கிரீன் பார்க் பயிற்சி மையத்தலைவர் சரவணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகளும் மாணவ, மாணவிகளை பாராட்டினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img