உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் நகராட்சி மற்றும் பசுமை தமிழகம் மற்றும் ஈஷா இணைந்து மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாமக்கல்- திருச்சி சாலை இந்திரா நகர் பூங்காவில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி மற்றும் உலக சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் சண்முகம் ,நகர் நல அலுவலர் கஸ்தூரி பாய்,துப்புரவு அலுவலர் திருமூர்த்தி,ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன், பசுமை குணசேகரன், தலைமை ஆசிரியர் பெரியண்ணன், ஆசிரியர் சுமதி, வீசானம் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு
பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.