fbpx
Homeபிற செய்திகள்சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்

சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த ”எல் லோருக்கும் எல்லாம்” என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இரா ஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகி« யார் முன்னிலையில், திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச் சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கிடும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, ஏழை, எளிய பெண்களின் உயர்கல்வியை ஊக்குவித்து உறுதி செய்திடும் “புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்குடன், மக்கள் மற்றும் அரசுக்கிடையேயான இடைவெளியைக் குறைத்திடும் வகையில், ”மக்களுடன் முதல்வர்”, ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” “நீங்கள் நலமா” உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.

மேற்படி ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகள், அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக் கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 150 -க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அடங்கிய அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அர சின் சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சி வருகிற 15ம் தேதி (வெள்ளிக் கிழமை) வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) த.வடிவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img