சென்னையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கும், மாநிலவினியோக நிறுவனங்களுக்கும் இடையே யான இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில் இந்த வாடிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது.
வாடிக்கையாளர் களின் கவனத்தையும், மனநிறைவையும் பெறுவதற்கான சிறந்த அர்ப்பணிப்பு, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளின் ஒரு பகுதியாக இருக்கிறது என்றார். மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் முக் கிய மதிப்புகள், நிறுவ னத்தின் விரிவாக்கத்திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.
இதை தொடர்ந்து, தமிழ் நாடு மின் பகிர்மான கழக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ்லக்கானி பேசுகையில், என்.எல்.சி.மின்நிலையங்களில் இருந்து மின்சாரத்தை பெறும் மிகப்பெரிய வாடிக்கையாளர்களாக தமிழ் நாடு மின் பகிர்மான கழகம் திகழ்கிறது. தடையற்ற தகவல் தொடர்பு மற்றும் பரஸ்பர புரிதல்கள் மூலம் பிரச்சினை கள் தீர்க்கப்பட்டு வருகிறது என்றார்.
இதில் என்.எல்.சி. இந்தியா நிறுவன மின்துறை இயக்குனர் வெங்கடாச்சலம், தமிழ் நாடு மின்பகிர்மான நிறுவனத்தின் நிதித்துறை இயக்குனர் மலர்விழி, என்.எல்.சி.நிதித்துறை இயக்குனர் பிரசன்னகுமார் ஆச்சார்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுப்பிக்க தக்க எரிசக்தி ஆதாரங்களை ஒருங்கிணைப்பது, போட்டி விகிதங்களில் தொடர்ச்சி யான மின்சார வினியோகத்தை உறுதி செய்வதற்காக வரவிருக்கும் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பது உள்பட வினியோக நிறுவனங் கள் வைத்த கோரிக்கைகள் குறித்த ஒரு திறந்த வெளி கலைந்துரையாடல் நடை பெற்றது.



