மூலிகைகளும் அதன் பலன்களும் குறித்த சிறப்பு பயிற்சி பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு நேற்று நடந்தது. தன்வந்திரி தன்னார்வலர் குழு தலைவர் ஆசைத்தம்பி மூலிகைகள் குறித்து விளக்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கே முருகானந்தம், வேளாண் மை ஆசிரியர் கந்தன், தாவரவியல் ஆசிரியர் அருண்குமார், தன் னார்வலர்கள் டாக்டர் மூர்த்தி, கா.பா ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசை தம்பி கீழ்க்கண்ட மூலிகைகளை நேரில் கொண்டு வந்து மாண வர்களுக்கு விளக்கினார். வெட்டிவேர், தேத்தான் கொட்டை, இன்சுலின் செடி, அதிமதுரம், சீரகம், கட்டுக்கொடி, மூக்கிரட்டை, கற்பூரவள்ளி, கருந்துளசி, வில்வம், எலுமிச்சம் புல், ஊமத்தங்காய், குப்பைமேனி, பூனை வணங்கி, சிறு குறிஞ்சாண், உருமத்தி, பாம்பு செடி மருள், சிரியா நங்கை, பிரண்டை, ரணகாலி, சோத்துக்கத்தாழை, ஆடா தொடை, தூதுவளை, முடக் கத்தான் குதிரை குளம்பு, பச்சைக் கற்பூரம், புதினா ஓமம், சோத்துக்கத்தாழை உப்புகள், நித்திய கல்யாணி, அரளி, மருதாணி.
அவர் பேசியதாவது: மேற்கண்ட மூலிகைகள் நம்மைச் சுற்றியே கிடைக் கின்றன. மேட்டூரில் உள்ள அரசு மூலிகைப் பண்ணையிலும் கிடைக் கின்றன. இந்த மூலிகைகள் இருமல், சளி, சிறுநீரக பிரச்சனைகள், தோல் நோய்கள், புண்கள், சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, கபம், உடல் வலி போன்ற எணற்ற நோய்களை குணப்படுத்தும். ஆனால் பெரும்பாலோருக்கு இந்த மூலிகைகளின் பயன்கள் தெரிவதில்லை. எனவே இந்த விழிப்புணர்வூ கூட்டம் மாணவர்களுக்கு இலவ சமாக நடத்தப்படுகிறது. மாணவர்கள் குறிப்பாக வேளாண்மை பயிலும் மாணவர்கள் மூலிகைகளை நன்கு தெரிந்து கொண்டு மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அத னால் அவர்கள் குறைந்த செலவில் மருத்துவ வசதியை பெற முடியும்.
அது மட்டுமல்லாமல் இந்த மூலிகைகளை தங்கள் பகுதிகளிலே வளர்க்கலாம். ஏதாவது ஒரு மூலிகையை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டு அதன் மருத்துவ குணங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் போது மிகப்பெரிய அளவில் பொருளாதார வளம் பெறலாம். குறிப்பாக அவர்கள் மூலிகையிலிருந்து மருந்துகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய் யும் போது பெரிய தொழில திபதியாகவும் மாறலாம்.