மருத்துவம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, மாநாடு உள்ளிட்டவற்றை சவீதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில் பன்முக கல்வி – ஆராய்ச்சி தொடர்பான 2வது வருடாந்திர மாநாட்டை ‘மெட்ஸ்டார் மாநாடு 2023’ என்ற பெயரில் நடத்தியது.
மாநாட்டின் முக்கிய நோக்கம் மாணவர்களின் பாடத்திட்டத்துடன் ஆராய்ச்சி தொடர்பான ஒருங்கிணைப்பையும் வலியுறுத்துவது ஆகும்.
கடந்த 2-ந்தேதி துவங்கி 6-ம் தேதி வரை மாநாடு நடைபெற்றது. மாநாட்டை காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பத்மா ப்ரியதர்சினி துவக்கி வைத்து, மாணவர்கள் வைத்துள்ள 1000 அடி நீளமுள்ள சுவரொட்டி விளக்க காட்சியை பார்த்து, மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் அவர்களின் எதிர்கால ஆய்வுப் பணிகள் குறித்து அவர்களுடன் விவாதித்தார்.
சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்த ‘மெட்ஸ்டார் மாநாடு 2023’-ன் மூலம் இடைநிலை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதையும், சிறந்த நடைமுறைகளை தங்கள் மாணவர்களுக்கு வழங்குவதையும் முக்கிய நோக்க மாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு மாணவர் களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, வருங்காலத்தில் இதுபோன்ற பல்வேறு ஆராய்ச்சி மாநாடுகள் நடத்துவதற்கான எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.



