fbpx
Homeபிற செய்திகள்சிறுமுகை அருகே இரவில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை ஆண் யானை

சிறுமுகை அருகே இரவில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை ஆண் யானை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை ஆண் காட்டு யானை அங்கிருக்கும் விவசாய விளைநிலங்களுக்கு நுழைந்து வருகிறது

இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பிரகாஷ் என்பவரது வீட்டின் அருகே வந்து நின்று கொண்டிருந்தது
பிரகாஷ் கால்நடைகள் வளர்த்து வரும் நிலையில் அவர் மாட்டுகளுக்கு தேவையான சோளத்தட்டை வீட்டின் முன்பு வைத்திருந்த நிலையில் அங்கு வந்த ஒற்றை ஆண் காட்டு யானை அதனை ருசி பார்த்தது அவரது வீட்டின் முன்பு நின்ற படி அங்கும் இங்குமாக உலாவிய நிலையில் பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றது அந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தற்போது அந்த காட்சிகள் வெளியாகியுள்ளது

மேலும் இதேபோல் சிறுமுகை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சத்தி சாலையில் உள்ள விஸ்கோஸ் ஆலை முன்பு உலாவியபடி இருந்தது
இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுக்க முயற்சித்த நிலையில் அவர்களை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
பின்னர் வெகுநேரமாக சாலை ஓரத்தில் நின்று கொண்ட இருந்த யானை பின்னர் விஸ்கோஸ் ஆலை அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்தது

படிக்க வேண்டும்

spot_img