fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாலத்தீவு நேரடி கப்பல் சேவை: மத்திய இணை அமைச்சர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாலத்தீவு நேரடி கப்பல் சேவை: மத்திய இணை அமைச்சர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவையை மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வைத்து இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவையை கொடி அசைத்து துவக்கி மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில் “இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு இக்கப்பல் சேவை மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இக்கப்பல் சேவை இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மாலத்தீவு மற்றும் இந்திய மக்களிடையே நல்உறவினை மேம்படுத்துதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

இந்த முதல் பயணத்தின் போது 421 டி.இ.யு சரக்குபெட்டகங்களை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் மொத்த சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதி கொண்ட எம்.எஸ்.எஸ்.கலேனா என்ற இக்கப்பல் 270 டி.இ.யு சரக்குபெட்டகங்களை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறை முகத்தில் இருந்து மாலத்தீவிற்கு எடுத்து செல்கிறது. இந்த கப்பல் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு வரும் 7ஆம் தேதி மாலே துறைமு கத்தை சென்றடையும்.

விழாவில் வ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன், விழா வில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணைத் தலைவர் பீமல் குமார் வரவேற்புரை ஆற்றினார். துறைமுக நிர்வாக குழு ஆணையர், சங்கத் துறை, உறுப்பினர்கள் கே.வி.வி.ஜி. திவாகா, தூத்துக்குடி, உயர் அதிகாரிகள், கப்பல் போக் குவரத்து கழகம், துறைமுக உபயோ கிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img