fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்கிய கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி

மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்கிய கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், பிஎல்எ-2 வைச் சேர்ந்த நிர்வாகிகளின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உயர் கல்விக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கல்வி உதவித்தொகை என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி வழங்கி வருகிறார்.


அதன் அடிப்படையில் நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகரங்கள், நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம் ஆகிய ஒன்றியங்கள், சேந்தமங்கலம், மோகனூர் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள், பிஎல்எ 2 ஆகியோரின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் உயர் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் இல்லம் பேராசிரியர் அரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சி.மணிமாறன் தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலி ங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்க ளவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கலந்துகொண்டு 51 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் நலங்கிள்ளி, நாமக்கல் மாநகராட்சி துணை மேயரும், நகர கிழக்கு நகர செயலாளருமான செ. பூபதி, நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், என்.ஆர்.சங்கர், அ.சிவக்குமார், ஒன்றிய திமுக செயலாளர்கள் அ.அசோக்குமார், வி.கே.பழனிவேல், பெ. நவலடி, பேரூர் செயலாளர்கள் செல்லவேல் (எ) சி.செல்லப்பன் என்.தனபால், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன்.சித்தார்த், துணை ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்பரர் வ.இளம்பரிதி மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img