கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன் னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கோவை சிபிசிஐடி அலுவல கத்தில் இன்று காலை ஆஜரா னார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்க ளில் ஈடுபட்ட சயான், வாளை யார் மனோஜ், சம்சீர் அலி உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன் னாள் எம்எல்ஏ. ஆறுகுட்டி உட்பட இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற் கொண் டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஏடிஎஸ்பி-க்கள் வீரபெருமாள், பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், கொடநாடு வழக்கில் தொடர்புடைய சயான், அமமுக நிர்வாகி கர்சன் செல்வம் ஆகியோரி டம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல் வேறு தகவல்கள் திரட்டப்பட்டுள் ளன. அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் கள் அளித்த பதில்கள் வீடியோ வாக பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு கடந்த வாரம் கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி இன்று காலை 10.45 மணி அளவில் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் கொடநாடு, கொலை கொள்ளை வழக்கில் பல்வேறு கேள்விகளை கேட்டு துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
அவரிடம் இன்று மாலை வரை விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக கொடநாடு வழக்கில் சிபிசிஐடி விசாரணை இறுகியுள்ளது. இதில் அடுத்த கட்டமாக அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சில ருக்கு விரைவில் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் கிடைத் துள்ளது. இது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்ப டுத்தி உள்ளது.