fbpx
Homeபிற செய்திகள்தேனி அருகே மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

தேனி அருகே மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

தேனி மாவட்டம் குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி 4ம் ஆண்டு மாணவியர்கள் அய்யம்பாளையம் பகுதியில் மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி குள்ளப்புரம் பகுதியில் அமைந்துள்ள வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் அம்ரிதா, மதிவதனி ஜெகத்‌, சுபா ஷினி, சன்மதி, ஷிவானி, பிரவினா, மோனிஷா, எழில் நிலவு, நிஷாலினி, ஜனனி, லின்சி, திலகவதி உள்ளிட்ட மாணவிகள் கடந்த ஒரு மாதமாக கிராம தங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் களப்பணியில் ஈடுபட்டனர்.


அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகு தியில் அமைந்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டம் மற்றும் தீவிர தூய்மை பணி குறித்த உறுதிமொழியினை பொதுமக்கள் மற்றும் மாணவியர்கள் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


இது குறித்து களப் பணியில் ஈடுப்பட்டுள்ள மாணவியர்கள் கூறுகை யில்,
“மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் பிளாஸ் டிக் மாசுபாடு உலகளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சிக்கலாக மாறியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு “மீண்டும் மஞ்சப்பை” என்ற திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, பாரம்பரியமான மஞ்சப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். நீர்நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு பல பாதிப்புகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் நிறுத்த வேண்டும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img