fbpx
Homeபிற செய்திகள்அன்னையர் தினம் - செவிலியர் தின விழா வேலூர் நாராயணி மஹாலில் கொண்டாட்டம் நடிகை நளினி...

அன்னையர் தினம் – செவிலியர் தின விழா வேலூர் நாராயணி மஹாலில் கொண்டாட்டம் நடிகை நளினி சிறப்புரை ஆற்றினார்

ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக ஆசியுடன், வேலூர் நாராயணி மஹாலில் அன்னையர் மற்றும் செவிலியர் தினக் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ நாராயணி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பேராசிரியர் என்.பாலாஜி விளக்கேற்றி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.


பிரபல நடிகை நளினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னையரின் தியாகத்தையும், செவிலியர் களின் அர்ப்பணிப்பையும் போற்றிப் பேசினார். மேலும், டிவைன் & சுகி குழுமங்களின் இயக்குனர் கள் ஸ்ரீநாத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.


இந்திய விளையாட்டு வர்ணனையாளர் மற்றும் அம்மாவின் தீவிர பக்தரான ரவி சதுர்வேதி தனது உரையில், தாய்மார்களின் அன்பையும், செவிலியர் களின் கருணையையும் உருக்கமாக எடுத்துரைத்தார்.


டாக்டர் கீதா இனி யன், டாக்டர் சக்திவேலன், டாக்டர் மாதவி உள்ளிட்ட மருத்துவத் துறை வல்லு நர்களும், பல்வேறு நர்சிங் கல்லூரிகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியா ளர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகளும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.


விழாவில், தாய்மார்கள் மற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகளின் கண்கவர் நடனங்களும், ஆசிரியர் களின் இசை நிகழ்ச்சிகளும் அனைவரையும் கவர்ந் தன. மேலும், சிறந்த செவிலியர்களும், தாய்மார்களும் பரிசுகள் வழங்கி கவு ரவிக்கப்பட்டனர்.
பேராசிரியர் என்.பாலாஜி தனது நிறை வுரையில், தாய்மார்களின் அன்பும், செவிலியர்களின் சேவையும் இந்த சமூ கத்திற்கு எவ்வளவு முக்கி யமானது என்பதை வலியுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img