fbpx
Homeபிற செய்திகள்எரிபொருள் சிக்கனத்தின் கூடுதல் நன்மையுடன் ‘எக்ஸான் மொபில் 1 ட்ரிப்பிள் ஆக்ஷன் பவர்’

எரிபொருள் சிக்கனத்தின் கூடுதல் நன்மையுடன் ‘எக்ஸான் மொபில் 1 ட்ரிப்பிள் ஆக்ஷன் பவர்’

எக்ஸான்மொபில் மிகச் சிறப்பான முழுமையான செயற்கை என்ஜின் ஆயிலான மொபில் 1ல் ட்ரிப்பிள் ஆக்ஷன் பவர்+ ஐ வெளியிடுகிறது, இது எரிபொருள் சிக்கனத்தின் கூடுதல் நன்மையுடன் சிறந்த இயந்திர செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தூய்மை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களின் சக்தியைத் திறக்க உதவுவதற்காக சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.

“எங்கள் மொபில் 1 என்ஜின் ஆயில்களை ஆய்வகத்திலும், சாலையிலும், உலகில் எந்த இடத்திலும் இருக்கக் கூடிய சில கடினமான, மிகவும் கடுமையான மற்றும் நிஜ உலக நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற வழித்தடங்களிலும் சோதனைக்கு உட்படுத்தினோம்.

ஃபார்முலா ஒன் என்பது மொபில் 1 என்ஜின் ஆயில்களுக் கான இறுதி சோதனைக் கள மாகும். இது ரேஸ் கார்களின் அனைத்து இயங்கும் பகுதிகளிலும் உராய்வு மற்றும் தேய்மானத்தைக் குறைக்க உதவுகிறது.

மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் செர் ஜியோ பெரெஸுக்கு, இது அவர்களின் கார்மீது அதிக தன்னம்பிக்கையும், அவர்களின் கைகளில் கூடுதல் சக்தியும், வெற்றி மேடையை அடைவதற்கான அதிக வாய்ப்புகளையும் அளிப்பதாகும்.

லூப்ரி கண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

ஃபார்முலா ஒன் ஆல் உந்துதல் பெற்று, கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களின் சக்தியைத் திறக்க உதவும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மொபில் 1 என்ஜின் ஆயில்களின் புதிய வரிசையை வெளியிடுகிறோம்” என்று எக்ஸான்மொபில் லூப்ரி கண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) விபின் ராணா கூறினார்.

“மொபில் 1 ஆனது 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்முலா ஒன்னில் பிரபல பிராண்டாக இருந்து வருகிறது. எக்ஸான்மொபில் உடைய உலகத் தரத்திலான நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான தனித்துவமான வாய்ப்பை எங்கள் கூட்டாண்மை வழங்குகிறது.

எங்கள் உலக சாம்பியன்ஷிப் வெற்றியானது உயர்ந்த மட்டத்தில் செயல்படும் நூற்றுக்கணக்கான அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் முயற்சி மற்றும் ரேஸ் காரின் செயல்திறனை தொடர்ந்து செம்மைப்படுத்தும் அணியின் திறனின் விளைவாகும்” என்று ஆரக்கிள் ரெட் புல் ரேசிங் உடைய குழு முதல்வர் கிறிஸ்டியன் ஹார்னர் கூறினார்.

மொபில் 1 டிரிப்பிள் ஆக்ஷன் பவர்+ இப்போது புகழ் பெற்ற ஆட்டோமோடிவ் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஒர் க்ஷாப்களில் கிடைக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img