Homeபிற செய்திகள்இந்தியாவின் மிகப்பெரிய ரேசிங் சாம்பியன்ஷிப் ‘கேடிஎம் ஆர்சி கப்’ அதிரடிக்கு தயாராகும் கோவை

இந்தியாவின் மிகப்பெரிய ரேசிங் சாம்பியன்ஷிப் ‘கேடிஎம் ஆர்சி கப்’ அதிரடிக்கு தயாராகும் கோவை

உலகின் நம்பர் 1 பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் (KTM), இந்தியாவின் மோட்டார் விளையாட்டுத் தலைநகரான கோவையில், கரி மோட்டார் ஸ்பீட்வேயில், இந்தியாவின் மிகப்பெரிய ரேசிங் சாம்பியன்ஷிப்பான KTM RC CUPன் ஏழாவது சுற்றில் கால்பதிக்கிறது.

RC CUP என்பதுKTM Pro-XP யின் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் Dakar, MotoGP, Motocross (MX), Supercross (SX) மற்றும் Enduro போன்ற அனைத்து பந்தய வடிவங்களிலும் 334+ உலக சாம்பியன்ஷிப் பட்டங்களுடன், READY TO RACE பிராண்டான KTM மோட்டார்ஸ் போர்ட்ஸில் நீடித்த 70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது.

சாம்பியன் ஷிப்

கோவை சாம்பியன் ஷிப்பிற்கான பதிவு மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது மற்றும் சுமார் 180+ ரேஸர்கள் Ready to Race’ KTM RC 390 GP ஃபினிஷ் லைன் வரை ஓட்டும் சிலிர்ப்பான சாகச அனுபவத்தைப் பெற்றனர்.

தகுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 வேகமான வீர்கள் – சூர்யா, நவநீத் குமார், அமர்நாத், ராஜ் குமார், ஆல்வின் சேவியர், ருஷப் ஷா, ஆனந்த் என், ஸ்ரீ ராம் எஸ், நரேஷ் கனமே மற்றும் முகமது ஷஹாஸ் RC கப் தேர்வுகளுக்காக இந்த வார இறுதியில் (மார்ச் 11, 12) சென்னையில் அதன் அடுத்த தேர்வுச் சுற்றுக்கு நகரும், அதைத் தொடர்ந்து சென்னையில் இறுதிப்போட்டி நடைபெறும்.
இந்நிகழ்வில் பேசிய, பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (புரோபைக்கிங்) தலைவர் சுமீத் நரங் , KTM RC கோப்பையின் கடைசி கட்டத்தை கிட்டத்தட்ட அடைந்துவிட்டோம்.

இப்பயணம் முற்றிலும் த்ரில்லாக இருந்தது. KTMமின் முக்கிய DNA ரேசிங் ஆகும். இது, நாடு முழுவதும் உள்ள பல பந்தய ஆர்வலர்களுடன் இணைவதற்கு உதவியுள்ளது.

இந்த தருணத்தில் முதல் 10 ரைடர்களை வாழ்த்துவதோடு, சென்னையில் நடக்கும் தகுதிச் சுற்றில் பங்கேற்க அவர்களை வரவேற்கவும் விரும்புகிறேன்.
அனைத்து KTM இந்திய ரசிகர்களையும் பந்தயத்திற்குத் தயார்படுத்துவதை ஆவலோடு எதிர்நோக்குகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img