Homeபிற செய்திகள்சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ நியமனம்

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பின ராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய் யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்புக்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட் டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய் வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களுக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுவதாகவும், சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களை பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் தனது பங்களிப்பை வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img