ஈரோடு காலிங்கராயன் இல்லம் (பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகை) முதல் திண்டல் வரை மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தி யக்கூறுகளை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளதாக கைத் தறி, கதர் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி தெரிவித்தார்.
ஈரோடு பெரியார் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் கலந்து கொண்டார். அவ்வமைப்பின் சார்பில் அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், 1,500 மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப் பிலான நோட்டுப் புத்த கங்கள், அரிசி, சேலைகள் மற்றும் புத்தகப் பைகளை அமைச்சர் வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர், ஈரோடு காலிங்கராயன் இல்லம் முதல் திண்டல் வரை யிலான மேம்பாலம் மட்டுமின்றி, மேட்டூர் சாலையிலும் மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்ய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். பல ஆண்டுகளாக இத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்தத் திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டவுடன், மேம்பாலங்களை அமைப் பதற்கான நிதியைப் பெறு வதற்காக முதலமைச் சரின் உதவியை நாடவுள் ளதாகவும் அவர் குறிப் பிட்டார்.
வழங்கப்பட்ட உதவி கள் அனைத்தும் அரசு நிதியிலிருந்து அல்லாமல், கட்சித் தொண்டர்களின் பங்களிப்பிலிருந்து வழங்கப்பட்டதாக அமைச்சர் தெளிவுபடுத் தினார். மேலும் அவர் கூறு கையில், கடந்த நான் கரை ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் எந்தப் பணியையும் செய்ய வில்லை என்றும், தற்போது தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அடிப்படை மற்றும் கட்டமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பெரியார் நகர் தவெக
அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த விழா விற்கான ஒருங் கிணைப்புப் பணிகளை அக்கட்சியின் நிர்வாகிகள் ஹக்கீம், அறி வழகன் மற்றும் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.



