fbpx
Homeபிற செய்திகள்செக்கானியா ஜெபகுழு கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கி உரை

செக்கானியா ஜெபகுழு கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கி உரை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இபி காலனி செக்கானியா ஜெபத்தோட்டத்தில் 15வது ஆண்டு கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டியில் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி பேசினார்.


நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை செக்கானியா ஜெபகுழு போதகர் ராஜகுமார், பெரில் ராஜ்குமார் வரவேற்றனர். முன்னதாக பாதர் ராபின்சன் ஆரம்ப ஜெபம் செய்தார், கிறிஸ்துமஸ் கால சிறப்பு செய்திகளை சி.த.பொன்பாண்டியன் வழங்கினார்.

நிகழ்ச்சி யில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், கவுன்சிலர்கள் இசக்கி ராஜா, கண்ணன், ராமர், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், சக்திவேல், வட்டச் செயலாளர் பொன் பெருமாள் மற்றும் செக்கானியா ஜெபத் தோட்ட ஊழியர்கள் ஆல்ட்ரின் தமிழ்ச்செல்வி ஏஞ்சல் ஷெரின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img