அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் கான்கிரீட் தளம் மற்றும் மாநகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றதை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச் சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, திருநெல்வேலி இனிப்பக உரிமையாளர் சங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மாடவீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக முதற்கட்டமாக ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் 17 கிமீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது.
இப்பணியை பொதுப் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை கண்காணித்து வருகிறார்கள்.
அதன்படி மாடவீதிகளை சுற்றி நெடுஞ்சாலை துறை மூலமாக கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் அவர் கள ஆய்வு மேற்கொண்டார்.
மீதம் உள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் துரிதமாகவும் தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.



