fbpx
Homeபிற செய்திகள்சிறப்பு சலுகை கட்டணத்தில் கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை

சிறப்பு சலுகை கட்டணத்தில் கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை

கோவை கொங்குநாடு மருத்துவமனையில் 02.10.25 அன்று மார்பகப் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டது.

இம்முகாமுக்கு கொங்குநாடு மருத்துவமனையில் தலைமை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் தலைமை தாங்க, மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு, அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் செந்தில் குமார், மகப்பேறு மருத்துவர் டாக்டர் ரமிலா, மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பிரணவ் சக்தி குமார் மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை மேலாளர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து துறை மகளிர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமினை டாக்டர் ரமிலா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். டாக்டர் ஆனந்த் மார்பக புற்றுநோயின் பாதிப்புகள் அதனுடைய காரணங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.

மேலும் இந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொங்குநாடு மருத்துவமனையில் 2500 ரூபாய் வரை ஆகும் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மெமோகிராம் டெஸ்ட் வெறும் ரூ.999 மட்டுமே செய்யப்படுகிறது.

இதை தவிர குலுக்கல் முறையில் தினமும் மூன்று பெண் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மெமோகிராம் டெஸ்ட் இலவசமாக செய்யப்படுகிறது.

இது பொது மக்களிடையே மார்பக புற்றுநோயினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், ஆரம்ப கட்டத்திலேயே மார்பக புற்றுநோயினை கண்டறிவதற்குமான ஒரு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் மருத்துவ இயக்குனரும் கேட்டுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img