கோவை, திருச்சி, மதுரை மற்றும் சென்னை நகரங்களில் புதிதாக நான்கு இணை பணியிட அலுவலகங்களை உருவாகியிருக் கிறது மீக்ரோ க்ராஃபியோ நிறுவனம்.
சமூக தாக்க ஸ்டார்ட்அப் நிறுவனமான மீக்ரோ க்ராஃபியோ, இணை பணியிட அலுவலங்களை உருவாக்கும் துறையில் ஒரு வளர்ந்து வரும் நிறுவனமாகும்.
இந்த நான்கு இணை பணியிட அலுவலகங்களை உருவாக்கியி ருப்பதன் மூலம் இதுவரை மொத்தம் முப்பத்தியாறு (36) இணை அலுவலகங்களை இந்நிறு வனம் இந்தியா முழுவதும் உள்ள இரண்டாம் அடுக்கு நகரங்களில் உருவாக்கியுள்ளது.
வேலை வாய்ப்பு
இருபத்தி மூன்று (23) நகரங்களில் இதுவரை கால் பதித்துள்ள மீக்ரோ க்ராஃபியோ, ஆயிரத்திற்கும் (1000) அதிகமான வேலை வாய்ப்புக்களை இதன் மூலம் உருவாக்கியுள்ளது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் இணை பணியிடங்களை உருவாக்குவதன் மூலம், புதிய நிறுவனங்கள் இந்த நகரங்களில் தொடங்குவதற்கும், மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும் மீக்ரோ க்ராஃபியோ உதவுகிறது.
மீக்ரோ க்ராஃபியோவின் தனித்துவமான ஒருங்கிணைக்கப்பட்ட இணை அலுவலக வளாகம், மற்றும் பணியாளர் தீர்வு மூலம், அதன் வளாகங்கள் அமைக்கப்படும் நகரங்களில் சரியான உள்ளூர் திறமைகளை அடையாளம் காணவும், ஆள்சேர்க்கவும், பயிற்சி கொடுக்கவும் மற்றும் வேலையில் இந்நிறுவனம் அமர்த்தவும் உதவுகிறது.
மீக்ரோ க்ராஃபியோவின் வாடிக்கையாளர் பட்டியலில் ஜீ லேர்ன், யூபி, ரெட் பஸ் ஆதித்ய பிர்லா பேஷன், ரீடேய்ல்(Zee Learn, UB, Red Bus, Aditya Birla Fashion & Retail) போன்ற பெரிய நிறுவனங்கள் அடங்கும்.
பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான 3ஐ இன்போடெக்கிற்கு, சமீபத்தில் நூறு (100) பணியிடங்கள் கொண்ட மையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது மீக்ரோ க்ராஃபியோ.