கோவை மாநகர ஆயுதப் படை மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதனை நேரில் பார்வையிட்டு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அணிவகுப்பு மரியாதை
அப்போது அவர் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இந்த பயிற்சி விழா கடந்த 45 நாட்களாக நடைபெற்றது. இதில், ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 26 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 33 பேர் கலந்துகொண்டனர்.
இதனைதொடர்ந்து போலீஸ் கமிஷனரின் அறிவுரையின்படி, கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு இன்று புதியதாக துவங்கப்பட்டது.
இந்த இசைக்குழுவினை பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளுக்கு கட்டண அடிப்படையில் பயன்படுத்தலாம். 2 மணி நேரத்திற்கு ரூ. 10 ஆயிரமும், 3 மணி நேரத்திற்கு ரூ,12,500ம், 4 மணி நேரத்திற்கு ரூ. 15 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.