fbpx
Homeபிற செய்திகள்மேட்டூர் நகராட்சியில் ரூ.38.48 கோடியில் திட்டப்பணிகள் சேலம் ஆட்சியர் ஆய்வு

மேட்டூர் நகராட்சியில் ரூ.38.48 கோடியில் திட்டப்பணிகள் சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டம், மேட்டூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிவுசார் மைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், செய்தியாளர் பய ணத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித் ததாவது:

மேட்டூர் நகராட்சியில் ரூ 6.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (2023 – 24) கீழ் ரூ 1.95 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் பணி மற்றும் சிறப்பு சாலை திட்டப் பணிகளில் தூக்கணாம்பட்டி பயணியர் மாளிகை சாலையில் ரூ.6.21 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

2021 -22-ம் ஆண்டுகளில் கலைஞர் நகர்ப்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் 1 எண்ணிக் கையில் ரூ.46 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணியும், 2 எண்ணிக்கையில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளும், தமிழ்நாடு நகர்புற சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 எண்ணிக்கையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளும், மூலதன மானிய நிதியின் மூலம் 3 எண் ணிக்கையில் ரூ.1.31 கோடி மதிப் பிலான பணிகளும், 15-வது மத்திய நிதிக் குழு மானியத்தின் மூலம் 11 எண்ணிக்கையில் ரூ.1.54 கோடி மதிப்பிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 1 எண்ணிக்கையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணிகளும், நகர்புற துணை சுகாதார நிலையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 24 பணிகள் ரூ.10.90 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுள்ளன.

2022 – 23-ம் ஆண்டுகளில் அம்ரூட் – 2.0 திட்டத்தின் கீழ் 1 எண்ணிக்கையில் ரூ.26 லட்சம் மதிப்பிலான பணியும், 15வது மத்திய நிதிக் குழு மானியத்தின் கீழ் 8 எண்ணிக்கையில் ரூ.1.48 கோடி மதிப்பிலான பணிகளும், தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் 2 எண்ணிக்கையில் ரூ.62.28 லட்சம் மதிப்பிலான பணிகளும், நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் தெரு விளக்குஅமைக்கும் பணிகளும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையமும், காலை உணவு திட்ட சமையல் கூட கட்டடம் ரூ.9.50 லட்சம் மதிப்பிலான பணிகளும் என மொத்தம் 14 பணிகள் ரூ.11.26 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

15-வது மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் 1 எண்ணிக் கையில் ரூ.64 லட்சம்மதிப்பிலான பணிகளும், தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் 1 எண்ணிக் கையில் ரூ.86.50 லட்சம் மதிப்பிலான பணிகளும், சிறப்பு சாலை திட்டப் பணி களில் 14 எண்ணிக்கையில் ரூ.12.57 கோடி மதிப்பிலான பணிகளும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 எண்ணிக்கையில் ரூ.1.95 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கும் பணியும், நகர்ப்புற துணை சுகாதார நிலையம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 18 பணிகள் ரூ.16.32 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த இரண்டரை ஆண்டு களில் மட்டும் மேட்டூர் நக ராட்சியில் ரூ.38.48 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
மேட்டூர் நகராட்சியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மேற்கண்ட அனைத்து பணிகளை யும் தரமாகவும், உரிய கால அளவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு இவ்வாய்வின்போது அறிவுறுத்தப் பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்தார்.

மேட்டூர் நகராட்சி ஆணை யாளர் நித்தியா, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், நகராட்சிப் பொறியாளர் ஹரிஹரன், மேட்டூர் வட்டாட்சியர் விஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img