நிர்மலா மகளிர் கல்லூரியில் 77&வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சுபேதார் மேஜர் ஆர்.முருகன் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றியும், இந்திய மண்ணின் பெருமைகள் மற்றும் சிறப்புகள் குறித்தும் மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நிர்மலா மகளிர் கல்லூரியில் என்.சி.சி மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கல்லூரியின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இவ்வாண்டு முழுவதும் 75 நபர்களுக்கு மனிதாபிமான விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இதன் தொடக்கமாக சுதந்திர தின விழாவில் சமூக சேவை புரிந்துவரும் 15 நபர்களுக்கு மனிதாபிமான விருதுகளை கல்லூரி நிர்வாகத்தின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி மேரி பபியோலா, தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர் முனைவர் அருட்சகோதரி எமல்டா மேரி, நூலகத் துறைத்தலைவர் முனைவர் அருட்சகோதரி ஜாக்குலின், அருட்சகோதரி ஆல்பர்டா ஆகியோர் மனிதாபிமான விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்கள்.



