மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு சச்சிலானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் உலக யோகா தினத்தையொட்டி வசுதேவ குடும்பகம் என்ற தலைப்பில் பள்ளியின் உள் அரங்கில் 9வது ஆண்டு யோகாசனம் நடைபெற்றது.
இதற்கு பள்ளியின் செயலர் கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் டாக்டர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் டாக்டர் சக்தி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று யோகாசனங்களை மேற்கொண்டனர். இதில் ஆசனா, பிராணயாமம், பிரத்தியாகாரம், தரானா, சூரிய நமஸ்காரம் புஜங்காசனம், சலபாசனம், மச்சியாசனம், சர்வாங்காசனம், தனுராசனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்தனர். இதில் பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு யோகா பயிற்சியாளர் வெள்ளிங்கிரி பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை பராமரிப்பு துறை பொறுப்பாளர் கண்ணன் செய்திருந்தார்.