fbpx
Homeபிற செய்திகள்‘திறன்கள் மேலும் செம்மைப்பட்டன’ மனம் திறந்தார் கிரிக்கெட் வீரர் நடராஜன்

‘திறன்கள் மேலும் செம்மைப்பட்டன’ மனம் திறந்தார் கிரிக்கெட் வீரர் நடராஜன்

தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டித்தொடரில் Khiladix.com-ன் Ba11sy திருச்சி அணிக்காக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் டி. நடராஜன் விளையாடி வருகிறார்.

ஊடகவியலாளர்களை சந்தித்த போது, நாட்டுக்காக தேசிய அணியில் விளையாடுவது தனது திறன்களை மேலும் செம்மைப்படுத்தி கூர்மையாக் கியிருக்கிறது. பொறுப்புணர்வையும், சாதிக்க வேண்டுமென்ற மனஉறுதியையும் தனது மனதில் அதிகமாகவும், ஆழ மாகவும் அது பதிய வைத்திருப்பதாக டி.நடராஜன் கூறினார்.

Khiladix.com–ன் லோகோ (இலச்சினை) இடம்பெற்றுள்ள ஜெர்சி யை அணிந்து Ba11sy திருச்சி அணியின் வீரர்கள் தமிழ்நாடு பிரீமியர் லீக் அணியில் விளையாடி வருகின்றனர்.

தனது கிரிக்கெட் பயணம் குறித்து பேசிய நடராஜன், ‘‘எனது மனதில் எப் போதும் பசுமையாக நினைவில் இருக்கக்கூடிய தருணங்களுள் ஒன்றாக இருப்பது க்ளென் மேக்ஸ்வெல்- விக் கெட்டை நான் எடுத்ததுதான்’’ என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

‘‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவசியமாக இருக்கிற எதிர்பார்ப்புகள் மற்றும் தீவிர போட்டி உணர்வு ஆகியவற்றோடு அது ஒரு எதிர்பாராத, நம்பமுடியாத அனுபவம்’’ என்று அதனை அவர் வர்ணித்தார்.

தனது அணியின் சக வீரர்களி டமிருந்தும் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவிடமிருந்தும் தனக்கு கிடைத்த ஆதரவுக்காகவும், இந்திய அணிக்காக விளையாட வழங்கப் பட்ட வாய்ப்புக்காகவும் மனமார்ந்த நன்றி யுணர்வை நடராஜன் வெளிப்படுத்தினார்.

கிரிக்கெட் ஆர்வலர்களை வசியப் படுத்தும் பணியை தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர்ந்து செய்து வருகின்ற நிலையில், நடராஜனின் கிரிக்கெட் பயணமும் மற்றும் Khiladix.com தளத்துடன் அவரது அணியின் கூட்டு வகிக்கும் இந்த லீக் போட்டிக்கு ஆர்வமூட்டும் பரிமாணத்தை கூடுதலாக சேர்த் திருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img