கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு நாட்கள் சுற்றுபயணயம் மேற்கொண்டு உள்ள திமுகவின் துணை பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பனிகளை ஆய்வு மேற் கொண்டார்.
நகராட்சி பகுதியில் உள்ள வசந்தம் நகரில் சுமார் 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் யோகா பயிற்சி மையத்தை நீலகிரி எம்.பி ஆ.ராசா மக்கள் பயன்பாட்டிற் காக திறந்து வைத்தார்.மேலும் மணிநகர் அரசுப்பள்ளி அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையத்தின் கட்டுமான பணிகள் மற்றும் சாமன்னா நீர் ஏற்று நிலையத்தினையும் ஆய்வு மேற்கொண்டார்.
நந்தவனம்
இதனை தொடர்ந்து பழுத டைந்துள்ள நெல்லித்துறை சாலை மற்றும் மேட்டுப்பாளையத்தில் முன்னோர்களுக்கு பவானி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்கவும் ஈம காரியங்கள் செய்ய அனைத்து இந்து சமுதாய நலச் சங்கம் நிர்வகிக்கும் நந்தவனம் பகுதியினை ஆய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்
மேலும் அங்கு நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கை வைத்த நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய படித்துறை கட்டுதல்,கழிவறை,குளிப்பதற்கு குளியல் அறை போன்றவற்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் சாலை நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதனையும் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் செப்பனிட நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆ.ராசா தெரிவித்தார்
இதனை தொடர்ந்து மேட் டுப்பாளையம் நகராட்சி அலுவ லகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் பூமா, வட்டாட்சியர் மாலதி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி, ஆணையாளர் வினோத், கோவை வடக்கு மாவட்ட செயலா ளர் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் சட்ட மன்ற உறுப் பினர் பா.அருண்குமார், சி.ஆர்.ராமசந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் அஷ்ரப்அலி, நகரசெயலாளர்கள் முகமது யூனுஸ், முனுசாமி, அரசு வழக்கறிஞர் சிவசுரேஷ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், வழக்கறிஞர் சந்தானம், நகர மன்ற உறுப்பினர்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.