fbpx
Homeபிற செய்திகள்விஜய் வித்யாலயா பள்ளிகள் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் சிறப்பு பயிற்சி முகாம்- பேச்சாளர்...

விஜய் வித்யாலயா பள்ளிகள் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் சிறப்பு பயிற்சி முகாம்- பேச்சாளர் பர்வீன் சுல்தானா அறிவுரை

தர்மபுரி பென்னாகரம் மெயின் ரோடு மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிகரம் நம் உயரம் என்ற தலைப்பில் வழிகாட்டுதல் சிறப்பு பயிற்சி முகாம் தர்மபுரி சோகத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் தலைமை தாங்கினார். தாளாளர் மீனா இளங் கோவன், இயக்குனர் பிரேம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மில்லினியம் பள்ளி முதல்வர் ஷிபாகேத்தரின் வரவேற்று பேசினார்.

சிறப்பு பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு பொதுத் தேர்வு எழுதும் மாண வர்களின் பயத்தை போக்குவது எப்படி? தேர்வு எழுதும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், ஊக்கமளித்தும் பேசினார். மேலும் பல்வேறு பாட வல்லுநர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து விளக்கி பேசினர்.

இதில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் படிக்கும் ஆயிரக்கணக்கான 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி முதல்வர்கள் நாராயணமூர்த்தி, பத்மா, சிவகாமசுந்தரி, ஜோதிர்மயிதேவி, ஷோபனா, முதன்மை நிர்வாக அலுவலர் சந்திர பானு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை முதல்வர் துரைராஜ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img