fbpx
Homeபிற செய்திகள்பாமக கொடியேற்று விழா

பாமக கொடியேற்று விழா

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் உத்தரவின் பேரில் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஷாஜகான் தலைமையில் மேட்டுப்பாளையம் சிடிசி பஸ் டிப்போ அருகே பாமக கொடியினை மாநில அமைப்பு துணைச் செயலாளர் தங்கராஜ் ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஜெயராம் ஜி மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி நகர தொழிற்சங்க தலைவர் சாதிக் சேட் மாவட்ட இளைஞரணி தலைவர் அக்னி தேவன் இளைஞரணி செயலாளர் சீனிவாசகன், வழக்கறிஞர் ஆனந்தகுமார்,காரமடை ஒன்றிய அமைப்பாளர் நடராஜ் சிறுமுகை நகரத் தலைவர் சதாசிவம் சிறுமுகை நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன் மற்றும் சிவா, முருகேஷ் பிரசாத் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img