fbpx
Homeபிற செய்திகள்கே எம் சி ஹெச் சார்பில் கிராமப்புற மருத்துவர்களுக்கு மெடி அப்டேட் கருத்தரங்கு

கே எம் சி ஹெச் சார்பில் கிராமப்புற மருத்துவர்களுக்கு மெடி அப்டேட் கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை அன்னூர் வட்டத்தில் உள்ள புறநகர்ப் பகுதி மருத்துவர்களுக்காக “மெடி அப்டேட்” கருத்தரங்கை நடத்தியது.

கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக மே 12ம் தேதி அன்னூரில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்பில் கலந்துரையாடப் பட்டது. கருத்தரங்கைத் துவக்கி வைத்து கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், “கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அறிந்து கொள்ள இது போன்ற கருத்தரங்குகள் உதவிகரமாக இருக்கும்“ என்றார்.

இதேபோல, மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு புதிய மாற்றங்களை அறிந்து கொள்ள இந்த கருத்தரங்கு பயனாக இருக்கும் என்று செயல் இயக் குனர் அருண் பழனிசாமி பேசினார்.
முன்னதாக கேஎம்சிஹெச் மருத்துவ இயக்குனர் டாக்டர் விமல்குமார் அனைவரையும் வரவேற்று அறிமுக உரை ஆற்றினார்.

இந்த கருத்தரங்கில் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img