fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாட்டம்

ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாட்டம்

ஜி.கே.என்.எம் மருத்துவ மனையில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து பணியாற்றி சேவை யாற்றிய செவிலியர்களுக்கு, சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஜி.கே.என்.எம் மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஜி.மனோ கரன், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டின் செவிலியர் தின ஆய்வுப்பொருளான எங்கள் செவிலியர்கள் எங்கள் எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி” என்பது பற்றி பேசிய டாக்டர் ஜி.மனோகரன், மருத்துவத் துறையின் எதிர்காலம் செவிலியர்களை சிறப்பாக பயன்படுத்துவதில் தான் உள் ளது என்று குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் விழாவை யொட்டி, முன்னதாகவே செவிலியர்கள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மருத்துவமனையின் மருத்துவர்கள், நிர்வாகிகள் என அனைவரும் செவிலியர்களுக்கு வாழ்த் துகளைத் தெரிவித்து ஊக்குவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img