fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிச்சாமி

சேலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிச்சாமி

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது 70 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். குறிப்பாக 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதிமுக பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகி கள்,தொண்டர்கள் நேரடியாக வருகை தந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதி விழாக்கோலம் கொண்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பழவகைகள், மலர் கொத்துகள், சால்வைகள் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து செல்கின்றனர்.

தமிழக முழுவதும் இருந்து ஏராளமான அதிமுகவினர் சேலம் நெடுஞ்சாலை நகரில் குவிந்துள்ளதால் கோவில் திருவிழா போன்று காட்சிய ளிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img