Homeபிற செய்திகள்என்எல்சி சார்பில் வெகுஜன தூய்மை இயக்கம்

என்எல்சி சார்பில் வெகுஜன தூய்மை இயக்கம்

கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் வெகுஜன தூய்மை இயக்கம் நடைபெற்றது. என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி,சுரங்கத் துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன்,மனித வளத் துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் ஆகியோர் வெகுஜன தூய்மை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

பல்வேறு பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள், ஊழியர்கள், தொழிற்சங்க மற்றும் நலச்சங்க நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், சிஐஎஸ்எஃப் வீரர்கள், ஆசி ரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூய்மைப் பணியின் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் விதமாக, விழிப்புணர்வுப் பேரணிகள், நாடகங்கள், மனித சங்கிலி மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் என்எல்சிதலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசியதாவது: தூய்மை இயக்கத்தை கடைப்பிடிப்பதில் நாட்டிலுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் முதன்மையானதாகத் திகழ்ந்திட என்எல்சி இந்தியா நிறுவனம் பாடுபடும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தூய்மை இயக்கம் தொடங்கியதிலிருந்து என் எல்சி இந்தியா நிறுவனம் அதன் அனைத்து பகுதிகள், அலுவலகங்கள் மற்றும் நகரியங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்றார்.

சென்னை மண்டல அலுவலகம் சார்பில், நிதித் துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா, நிறுவன தகவல் தொடர்புத் துறை அதிகாரி கே.பிரபு கிஷோர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரக் கல்வி அதிகாரி டி.ஜி. ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலை மையில், ஊழியர்கள் எட்வர்ட் எலியட் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img