fbpx
Homeபிற செய்திகள்ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய மார்டின் குழுமம்

ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய மார்டின் குழுமம்

கோவை மார்டின் குழுமம் சார்பாக ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் – கோவை மாவட்ட ஆட்சியரிடம் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் வழங்கினார்.

கடந்த வாரம் தென் தமிழகத்தில் பெய்த கடும் மழையால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து பரிதவிக்கும் இவ்வேளையில் மார்டின் குழுமம் சார்பாக ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமாரிடம் மார்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img